வாக்கு எண்ணிக்கை: திமுக முகவர்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணிக்கை: திமுக முகவர்களுக்கு பயிற்சி
X
கவரப்பேட்டை லட்சுமி திருமண மண்டபத்தில் திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பயிற்சிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கவரப்பேட்டை லட்சுமி திருமண மண்டபத்தில் திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பயிற்சிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படி இன்று காணொளி ஜூம் மீட்டிங் வாயிலாக நடைபெற்ற கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோ எம்.பி சிறப்புரையாற்றி நெறிமுறைகளை எடுத்துரைத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஜே கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், கழக பொறுப்பாளர்களும், கழக முன்னோடிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!