தனியார் பள்ளி ஆசிரியைகள் பணியிலிருந்து விடுவிப்பு: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளி ஆசிரியைகள் பணியிலிருந்து விடுவிப்பு: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
X

செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர்கள்.

பெரியபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் காரணம் இன்றி ஆசிரியைகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புனித சூசையப்பர் பதின் பள்ளி எனப்படும் செயின் ஜோசப் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் பயின்று வருகின்றனர். 27-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இங்கு பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பணி செய்து வரும் 12 ஆசிரியர்கள் திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். காரணம் இன்றி பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் பள்ளியின் கல்வி ஆண்டு துவங்கி 5 மாதம் ஆன சூழலில் அடுத்து வேறு பள்ளிக்கு ஆசிரியர்களால் பணிக்கு செல்ல முடியாது. எனவே தங்களுடைய வாழ்வாதாரம் முழுக்க பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கல்வி ஆண்டு முடியும் வரை பள்ளியில் பணி செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி நுழைவாயில் எதிரே அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். இதனால் பெரியபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags

Next Story