12 மணி நேர வேலை மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் பு.ஜ.தொ.மு. சார்பாக 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் பு.ஜ.தொ.மு. சார்பாக 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிறுத்தத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக சட்டப்பேரவையில் அவசர அவசரமாக தொழிலாளர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சங்கங்களின் ஒப்புதல் பெறாமல் தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை திட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர்கள் முன்னணி மாநில தலைவர் பழனி, மாநில இணைச் செயலாளர் கே.எம். விகந்தர் ஆகியோர் பங்கேற்று பேசுகையில், திமுக அரசு பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாகவும், தொழிலாளர்கள் போராடி பெற்ற மோடி அரசு திட்டமிட்டு கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக மாற்ற முயன்று வரும் நிலையில், மாநில அரசும் இது போன்ற தொழிலாளர் விரோத சட்டத்தை அவசரகதியாக நிறைவேற்றியது கண்டிக்கத்தக்கது எனவும் கூறி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu