கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு தந்தையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு தந்தையை     கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பெரியநாயகி மாதா ஆலயம் பங்கு தந்தையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பங்குத்தந்தையின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பெரியநாயகி மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கிறிஸ்தவ மக்கள் இன்று பங்குத்தந்தையின் சர்வாதிகார போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவாலயத்தில் வழிபாடு செய்ய வரும் பெண்களிடம் பாலியல் ரீதியில் பேசி பங்குத்தந்தை தொந்தரவு அளிப்பதாகவும், சாதிய ரீதியில் பிளவுப்படுத்தவும் முயற்ச்சிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

வார விடுமுறை நாட்களில் தங்களை வழிபாடு நடத்த விடாமல் பங்குத்தந்தை தடுப்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!