பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை அகற்றி புதிய தொட்டிகள் கட்ட கோரிக்கை
திருக்கண்டலம் ஊராட்சியில் உள்ள ஆபத்தான இரண்டு குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகளை அகற்ற கோரிக்கை
திருக்கண்டலம் ஊராட்சியில் உள்ள ஆபத்தான இரண்டு குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகளை அகற்றி புதிய தொட்டிகள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் சுமார் 30,000 கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியும். தலையாரி தெரு மற்றும் பிராமண தெரு பகுதியில் சுமார் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
இப்பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு காலை,மாலை இரு வேலைகளிலும் இந்தக் குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு தொட்டிகள் கட்டி 40 ஆண்டுகள் ஆகிய நிலையில் தொட்டிகள் தூண்கள் மற்றும் மேல் தளங்கள் பழுதடைந்து பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி காட்சி அளிக்கின்றது.
இந்தக் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைந்திருக்கும் இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இவைகளை அகற்றி புதிய மேல்நிலை தொட்டிகளை அமைத்து தர வேண்டும் என்று எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும். மாவட்ட நிர்வாகத்திடமும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜனிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இது குறித்த பகுதி மக்கள் கூறியதாவது: தலையாரி தெரு மற்றும் பிராமண தெரு, பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டிகள் ஆனது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழுந்தால் பெரிய அளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்.
இது மட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒரு முறை குளோரினேசன் செய்து தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் ஏறினால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பணியாளர்கள் சுத்தம் செய்வதற்கு முன் வருவதில்லை, இதனால் மாசடைந்த தண்ணீரை பருகுவதாகவும். இதனால் மர்ம காய்ச்சல் வரும் என்ற அச்சத்துடன் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும் ஊராட்சியில் நடைபெறுகின்ற கிராமசப கூட்டங்களிலும் கோரிக்கை வைத்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நலனை கருதி உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, இந்த ரெண்டு குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகளை அகற்றிவிட்டு புதிய தொட்டிகளை கட்டித் தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu