தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தை விவகாரம் : 3 நர்சுகள் கைது

தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தை விவகாரம்  : 3 நர்சுகள் கைது
X
ஊத்துக்கோட்டை தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தை விவகாரத்தில் போலீசார் 3 நர்சுகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த காமேஷ் என்பவரின் மனைவி திவ்யா. இவரை கடந்த 4.9.2020 அன்று பிரசவத்திற்காக ஊத்துக்கோடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காலை 9 மணிக்கு அனுமதித்நிலையில் 2 மணி அளவில் பிரசவ வலி வந்துள்ளது. அப்போது பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை என தெரிகிறது. இதனால் திவ்யா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் 4 பேர் பிரசவம் பார்த்துள்ளனர்.

ஆனால் 2.30 மணி அளவில் பிறந்த பெண் குழந்தை இறந்தே பிறந்ததால் பெண்ணின் கணவர் காமேஷ் அதிர்ச்சி அடைந்தார். மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தே பிறந்ததாகவும், செவிலியர்களின் அலட்சியத்தாலாயே குழந்தை இறந்ததாக புகார் எழுந்தது.

ஊத்துக்கோட்டை போலீசாரால் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மருத்துவம் பார்த்ததால் உயிரிழந்தது உறுதியானது. இதனையடுத்து செவிிலியர்கள் மரியா,, சுகன்யா, ரம்யா ஆகிய 3 பேரை நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

மேலும் மற்றொரு செவிலியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!