பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் தரிசனம் ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் தரிசனம் ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்
X

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 3 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.

கொரோனா மற்றும் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் பக்தர்களுக்கு 3 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி மாதம் 15 வாரம் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதுமட்டுமில்லாமல் வெள்ளி சனி ஞாயிற்று கிழமை நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேற்று கடன்களை செலுத்தி தரிசனம் செய்து செல்வார்கள். இதனை அடுத்து கொரோனா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றி கோவில் நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் இன்று வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!