கவுன்சில் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை என கவுன்சிலர்கள் புகார்
அனைத்து துறை அதிகாரிகளும் முறையாக கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்த எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள்
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் முறையாக கலந்து கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்யததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த ரமேஷ் உள்ளார். இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மாதந்தோறும் நடைபெற்று வரும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் குழந்தை வேலு, வித்யா லட்சுமி வேதகிரி, தாமரைப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், கம்யூனிஸ்ட்ரைச் சேர்ந்த ரவி, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கூறியதாவது:
தங்களது குறைகள் குறித்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும், அனைத்து துறை அதிகாரிகளும் முறையாக கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்தும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது: சாலை வசதி, குடிநீர் வசதி, கொசு தொல்லை, கழிவுநீர் அகற்றுதல், மின் தெரு விளக்கு, நியாய விலை கடை, அங்கன்வாடி, அரசுப்பள்ளி உள்ளிட்ட அத்தியாவசிய கட்டிடங்கள் என பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து மாதாந்திர கவுன்சில் கூட்டங்களில் முறையிட்டு வருகிறோம்.
அவ்வாறு முறையிடும் போது ஒன்றியக்குழு தலைவரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பெயரளவிற்கு கூறுகின்றனர். கடந்த 3ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றியத்தில் முறையாக எந்த திட்டமும் நடைபெற வில்லை.. மேலும் கவுன்சில் கூட்டங்களில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பதில்லை. ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu