/* */

பெரியபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயண யாத்திரை

பெரியபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயண யாத்திரை சென்றனர்.

HIGHLIGHTS

பெரியபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயண யாத்திரை
X

பெரிய பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடை பயணயாத்திரை சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாளையொட்டி பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்,தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் பேரணி காங்கிரஸ் கொடியினை ஏந்தியபடி கும்மிடிப்பூண்டி நோக்கி பேரணியாக சென்றனர்.

சுதந்திர போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை போல தற்போதைய சூழலில் இந்தியாவை சீரழிக்கும் பா.ஜ.க.வே வெளியேறு என்பதை வலியுறுத்தி பாதயாத்திரையாக சென்றனர். இந்தியாவின் வளர்ச்சியை முடக்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பா.ஜ.க.வே வெளியேறு என்பதை முழங்கும் வகையில் தொடர் பாத யாத்திரை சென்று கும்மிடிப்பூண்டியில் முடிவடைந்தது. இதில் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், மாநில வழக்கறிஞர் அணி துணை தலைவர் ஹிமாலயா அருண் பிரசாத், கும்மிடிப்பூண்டி சம்பத், பெரியசாமி, எல்லாபுரம் வட்டார தலைவர்கள் மூர்த்தி,சிவசங்கரன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Aug 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?