கவரைப்பேட்டை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Girl Suicide  | Suicide News
X
Girl Suicide - திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Girl Suicide -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள சோமபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஹேமலதா(17) பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் . இரவு ஹேமலதா வீட்டில் உள்ள ஃபேனில் புடவையில் தூக்கிட்டு தொங்கினார்.

இதையடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஹேமலதாவை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஹேமலதா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கவரைப்பேட்டை போலீசார் , வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்