மணிப்பூர் பிரச்சனையை கண்டித்து கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடி இன மக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வலியுறுத்தியும், குற்றவாளிகளை கைது செய்ய கூறியும், கும்மிடிப்பூண்டி பஜாரில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.அருண்குமார் முன்னிலை வகித்தார், பால் எலிசா வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஏ.தாமஸ், பி.லாரன்ஸ்,சி.ஜெ.ராஜூ, சாமுவேல் ராஜ், ஆரோன், ஜார்ஜ் பாண்டியன், பி.லாரன்ஸ் உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சிறுபான்மை மற்றும் அரசியல் பரிவு, செபி பேராயத்தின் தலைவர் டாக்டர் க.மேஷாக் ராஜா, சிஎஸ்ஐ கும்மிடிப்பூண்டி குருசேகர ஆயர் ஏ.ரத்தினசாமி. ஆர்சிஎப் இயக்குனர் ஆயர் ஜெ.அலெக்ஸாண்டர், இசிஐ ஆலய ஆயர் ஜெப நேசகுமார், திரு இருதய ஆண்டவர் ஆலய பாதிரியார் ஏ.வி.ஸ்டாலின், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்க பொது செயலாளர் ஜெ.யாபேஸ் கண்டன உரையாற்றினர்.
இதில் தமிழ்நாடு சிறுபான்மை மற்றும் அரசியல் பரிவு, செபி பேராயத்தின் தலைவர் டாக்டர் க.மேஷாக் ராஜா பேசும் போது, தமிழகத்தில் உள்ள 24சதவீத கிறிஸ்தவர்கள் தமிழகத்தை ஆளுகின்றவர்களை தேர்ந்தெடுக்ககூடிய இடத்தில் இருக்கிறார்கள் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்றும், மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதால், உச்சநீதி மன்றம், மனித உரிமை அமைப்புகள் வன்முறையை தடுத்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில் மணிப்பூர் வன்முறையில் இறந்த மக்களுக்கு மெளனி அஞ்சலியும், ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷமும் எழுப்பப்பட்டது.முடிவில் போதகர்கள் எம்.பி.குமார், எஸ்.ராஜன், ஜே.எஸ்.பால்தினகரன் நன்றியுரை ஆற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu