புது கும்முடிபூண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்..!

புது கும்முடிபூண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்..!
X

உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்களை பரிசீலனை செய்து சிலருக்கு சான்றிதழ்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

புது கும்முடிபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் கிட்ட முகாமில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மக்களிடம் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன் வரவேற்றார்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன்,ஜெயச்சந்திரன், துணை தலைவர் எல்லப்பன், திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், ரவி, ஒன்றிய செயலாளர் மணிபாலன், பாஸ்கரன், அறிவழகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரேணுகாமுரளி, சுசீலாமுர்த்தி,பிரபு, கஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தத் திட்டத்தில் புதுகும்மிடிப்பூண்டி, அயநெல்லூர், பாத்தபாளையம், சிறுபுழல்பேட்டை, எஸ். ஆர். கண்டிகை, ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சிகளை சேர்ந்த ஏழை எளிய மக்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை ,காவல்துறை,மின்வாரியத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை,தொழில் துறை, உள்ளிட்ட 15 துறைகள் சார்பில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் 1261 மனுக்களை வழங்கினர். வழங்கிய மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு அளிக்கப்பட்ட பின்னர் உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்களை பரிசீலனை செய்து சிலருக்கு சான்றிதழ்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்.மக்களுடன் முதல்வர் திட்ட ஏற்பாடுகளை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன் நின்று சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா