கண்ணிகைப்பேரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..!
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.
கன்னிகைப்பேரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 11 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மனுக்கள் வழங்கினர் .
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது . இந்த முகாமிற்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமை வகித்தார்.
திமுக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு,மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், நிர்வாகிகள் கண்ணபிரான்,நீதி செல்வசேகரன், கே.வி. கார்த்தி,சுரேஷ், மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், அற்புதராஜ், டாக்டர் சங்கீதா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி உதயகுமார், துணைத்தலைவர் மேனகா, ஊராட்சி செயலாளர் பொன்னரசு ஆகியோர் வரவேற்றனர்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார். மேலும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார் . பின்னர் மருத்துவ பெட்டகம் மற்றும் 100 நாள் வேலை அடையாள அட்டை, காப்பீடு திட்ட அடையாள அட்டை ஆகியவை வழங்கினார்.
இம்முகாமில் அக்கரப்பாக்கம், ஆலப்பாக்கம், அமிதாநல்லூர், அத்திவாக்கம், கன்னிகைப்பேர், மதுரவாசல், மஞ்சங்காரணி, நெய்வேலி, 82 பனப்பாக்கம், பனையஞ்சேரி, திருநிலை ஆகிய 11 ஊராட்சிகளை சேர்ந்த 1000 கும் மேற்பட்ட மேற்கொண்ட கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர்.
இம்முகாமில் வருவாய்த்துறை, காவல் துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம் (சமூகபாதுகாப்புத்திட்டம்) தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu