சிசிடிவி கேமரா அமைத்திட வணிகர்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர்: விக்கிரம ராஜா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா
சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வணிகர்கள் ஆர்வம் காட்டினாலும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளால் பராமரிப்பில் தொய்வு ஏற்படுவதாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ எம் விக்கிரம ராஜா தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மணி டெக்ஸ்டைல்ஸ் மாபெரும் ஜவுளி கடை திறப்பு விழா நிகழ்வில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா பங்கேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரெட்டம்பேடு கூட்டு சாலையில் உள்ள கர்மவீரர் காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: வருகிற மே-5- ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் தின மாநில மாநாடு எழுச்சியோடு நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளை வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பம்பரம் போல் சுற்றி செய்து வருகின்றனர். இந்த மாநாட்டில் மாநிலத்தின் அமைச்சர்களும், அனைத்து மாநிலங்களின் வணிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
வணிகர்களின் பாதிப்புகளை சுட்டிக்காட்டும் மாநாடாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து வணிகர்களை பாதுகாக்க கூடிய மாநாடாகவும் அமையும். கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு, இப்பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஒதுக்கி அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான வாய்ப்பை சங்கத்தின் சார்பாக முன்னெடுக்க உள்ளோம், சிசிடிவி கேமரா பொருத்த வணிகர்கள் ஆர்வமுடன் செயல்பட்டாலும் சில காவல் அதிகாரிகள் அதை பராமரிக்க தவறி விடுவதாக குற்றம் சாட்டினார். காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றினாலும் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதை டிஜிபி உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu