கணவன் மனைவி தற்கொலையில் தொடர்புடைய வர்களை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டம்
தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்திபொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியரான பிரகாஷ் அவரது மனைவி சரிதா கந்து வட்டி கொடுமை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை செய்தவர் பிரகாஷ். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வைத்திருந்த காரின் செலவுகளுக்காக ஆரம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த தசரதன் மகன் ராஜா என்கிற முனுசாமி இடம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி அதற்கு மாதம் கந்து வட்டியாக 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரகாஷால் வட்டி கட்ட இயலாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஜா என்கிற முனுசாமி பிரகாஷிடம் அசல் மற்றும் வட்டியை கேட்டு அவரை மிரட்டியும், பிரகாஷையும், அவரது மனைவி சரிதாவையும் தகாத வார்த்தையால் பேசி உள்ளார்.மேலும் வியாழக்கிழமைக்குள் கடனை அசலுடன் ஒப்படைக்கா விட்டால், காரை பறிமுதல் செய்வததோடு, ஊர் கூட்டத்தில் வைத்து அசிங்கப்படுத்துவதாக மிரட்டியுள்ளார்.இதனால் மன உளைச்சலில் பிரகாஷ் மட்டும் அவரது மனைவி சரிதா விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டு, இரண்டு நாட்கள் ஆன நிலையில் அதற்கு காரணமானவர்களை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்யவில்லை என்று குற்றம் சாட்டி பிரகாஷ் சரிதாவின் உறவினர்களும் பொதுமக்களும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்வதாக கூறி சமாதானப்படுத்தினர். இதனால் ஆரம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu