பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை..!

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை..!
X

பெரியபாளையம் பவானியம்மன் திருவிளக்கு பூஜை 

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆனி மாதம் பௌர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் ஆடி திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வரும் மேலும் இக்கோவிலுக்கு சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா,கர்நாடகா, என பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.


சொந்த வாகனங்களிலும், பேருந்துகள் மூலம் சனிக்கிழமை அன்று பெரியபாளையம் வந்து இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, சிறுவர்கள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் மொட்டை அடித்து, ஆடு,கோழி என பலியிட்டு படையல் இட்டு உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கொண்டு கையில் தேங்காயை ஏந்தி கோவில் சுற்றி வலம் வந்து நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

ரூபாய் 100 இலவச தரிசனம் வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆனி மாதம் பௌர்ணமி முன்னிட்டு உலக மக்கள் நன்மை வேண்டி பொதுமக்கள் நோய் இன்றிவாழவும்,

பவானி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது. பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம்,மலர்களால்அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டினர். முன்னதாக உற்சவருக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் திரு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீ பவானி அம்மனுக்கு

மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி கோவில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!