பெரியபாளையத்தில் மின் கசிவால் பேக்கரி தீயில் எரிந்து நாசம்
தீவிபத்து ஏற்பட்ட பேக்கரி.
பெரியபாளையத்தில் பேக்கரி கடையில் அதிகாலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பேருந்து நிலையம் எதிரில் மோகன் குமார் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே இன்று அதிகாலை 4 மணியளவில் பேக்கரி கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேக்கரி கடையின் கதவை திறக்க இயலாததால் ஜேசிபி இயந்திரம் கொண்டு கதவைத் திறந்து பார்த்த போது தீ மளமள வென பரவியது. தொடந்து தெர்வாய் சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எறிந்து நாசமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu