முன்னாள் எம்எல்ஏ நண்பரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

முன்னாள் எம்எல்ஏ நண்பரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை
X
தமிழக-ஆந்திரா எல்லையில் முன்னாள் எம்எல்ஏ சத்யாவில் நண்பரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் நண்பர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை. 8பேர் கொண்ட குழுவினர் ஆவணங்களை ஆய்வு செய்தபோது ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவின் முன்னாள் சென்னை டி.நகர் எம்எல்ஏ சத்யா என்கிற சத்யநாராயணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து தமிழ்நாடு முழுவதும் 18இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ சத்யா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு - ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் நண்பர் திலீப்குமார் என்பவரது அலுவலகத் தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யின‌ர் தீ‌விர சோதனை மேற்கொண்டனர் .

திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி தலைமையில் 8.பேர் கொண்ட குழுவினர் சத்யாவின் நண்பர் அலுவலகத்தில் நேற்று உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர் . சத்யாவின் நண்பரான திலீப்குமார் யாமினி பிரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ள சொத்துகள் தொடர்பான ஆவணங்கள், மற்றும் கணினி தகவல்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ அவரது நண்பர் திலீப் குமார் கிடையே பணப்பரிவர்த்தனை சம்பந்தமான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது.




Tags

Next Story
ai solutions for small business