ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!
X

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம்.

மாதர்பாக்கம் பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து மது வகைகளை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் சுமார் 300 மதுபாட்டில்கள் கடத்திய இருவரை கைது செய்து ம மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!