முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!
X

பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கல்வி பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ரவிக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இலட்சிவாக்கம் கிராமத்தில் மாவட்ட இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இலட்சிவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கல்வி பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ரவிக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்

கே.வி.லோகேஷ், துணை அமைப்பாளர் டி.சங்கர்,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சி.மு.தேவன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணை அமைப்பாளர்கள் இளவரசன்,பி.எல்.ரவி, பூபாலன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.பாபு அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ கோவிந்தராஜன் கலந்துகொண்டு இலட்சிவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு அறுசுவை உணவு, நோட்டு,புத்தகம், புத்தகப்பை,உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட பிரிதிநிதிகள் சிவசங்கர்,சண்முகம்,ஒன்றிய நிர்வாகிகள் சிவாஜி,டில்லிசங்கர், வடிவேலு,ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்,உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!