பெரியபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

பெரியபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
X

பெரிய பாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெரியபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க .கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பில் பெரியபாளையத்தில் மறைந்த முதல்வர் அண்ணா 114.வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் பெரியபாளையம் மேம்பாலம் அருகே நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். விஜயகுமார் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு பூண்டி ஒன்றிய கழக செயலாளர் பிரசாத், ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயலாளர் ஷேக் தாவூத், கும்மிடிப்பூண்டி பேரூர் கழகச் செயலாளர் ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அனைவரையும் எல்லாபுரம் ஒன்றிய இணைச் செயலாளர் வித்யாலக்ஷ்மி, ஒன்றிய துணைச் செயலாளர் காயத்ரி ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் டி. கே.எம்.சின்னையா, கழக மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன், தலைமைக்கழக பேச்சாளர் பிராட்வே குமார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ராமன், கே.எம். எஸ்.சிவக்குமார், நிர்வாகிகள் இ.கே. கோகண்டன், சுந்தர்ராஜ், கேசவன், மகேஷ், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் அவைத்தலைவர் விஜயன் நன்றி கூறினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு