கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு
கும்மிடிபூண்டி அருகே ஏடூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் கேள்வி கேட்டதால் மோதல் ஏற்பட்டது.
Gram Sabha Meeting - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி வரவு செலவு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளிக்காததால் 3 மணி நேரம் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இதனிடையே அதிகாரிகள் பேச்சுவார்த்தை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. வரவு செலவு கணக்குகள் முறையாக ஒப்படைக்கவில்லை எனக்கூறி கிராம சபை கூட்டத்தை பொது மக்கள் புறக்கணித்து சென்றனர்.இதனால் தேதி குறிப்பிடாமல் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu