ஸ்ரீ மது சுந்தர நாயகி உடனுறை ஸ்ரீ ஆதி புரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ மது சுந்தர நாயகி உடனுறை ஸ்ரீ ஆதி புரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்
X

கோபுர விமான கலசங்களுக்கும், மூலவர்,பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கும் சிவாச்சாரியார்கள் 

பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ மது சுந்தர நாயகி உடனுறை ஸ்ரீ ஆதி புரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே அருள்மிகு ஸ்ரீ மது சுந்தர நாயகி உடனுறை ஸ்ரீ ஆதி புரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மது சுந்தர நாயகி உடனுறை ஸ்ரீ ஆதி புரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கோ பூஜை ரக்ஷா வந்தனம், இரண்டாம் காலையாக பூஜை, நாடி சந்தனம் மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்தது.

பின்னர் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள, தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து காலை 10:30 மணி அளவில் கோபுர விமான கலசங்களுக்கும், மூலவர்,பரிவார மூர்த்தி களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்குமம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு உடைகளாலும், திரு ஆபரணங்களால், அலங்காரம் செய்து தீப, தூப,ஆராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் புஷ்பா முருகன்,ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பிரபு மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil