/* */

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து தொழிலாளி பலி

சென்னைகும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து தொழிலாளி பலி
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி தண்டலச்சேரி செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான, மின்உற்பத்தி மற்றும் இரும்பு உருக்காலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 150க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வடமாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் குஜராத். ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த தொழிற்சாலையில் . உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிகொரிலால் (36) என்ற வாலிபர் கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலிருந்து கிரேன் தலையில் விழுந்தது. இதில் பிகொரிலாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட. சகத் தொழிலாளர்கள் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பிகொரிலால் உயிரிழந்தார் . இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 19 July 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது