கும்மிடிப்பூண்டி அருகே லாரியின் உதிரிபாகங்கள் திருடிய, 5 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே லாரியின் உதிரிபாகங்கள் திருடிய, 5 வாலிபர்கள் கைது
X
பைல் படம்
சிந்தலகுப்பம் பகுதியில் கிரேன் மற்றும் லாரியின் உதிரிபாகங்களை திருடிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் பகுதியைச் சேர்ந்த கந்தன் (49). இவர் கிரேன், லாரி உள்ளிட்டவைகளை விற்று தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஊருக்கு சென்ற நிலையில் கிரேன், லாரிகளில் இருந்து உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காயலார்மேடு சற்குணம் (21),மோகன்குமார் (20), சண்முகம் (22), சந்தோஷ் (22), கும்மிடிப்பூண்டி வினோத்(24), ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!