பெரியபாளையம் அருகே 30 டன் இரும்பு திருடிய 5 பேர் கைது

பெரியபாளையம் அருகே 30 டன் இரும்பு திருடிய 5 பேர் கைது
X

பைல் படம்.

பெரியபாளையம் அருகே மூடப்பட்ட தனியார் தொழிற்சாலையில் 30டன் இரும்பு திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரனை கிராமப் பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை பல்வேறு காரணங்கள் காரணத்தினால் இந்த தொழிற்சாலை கடந்த 3ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் கடந்த ஜனவரி மாதம் காவலாளிகளை மிரட்டி உள்ளே புகுந்து 30டன் இரும்பு உருளைகளை திருடிச் சென்றனர். இதுகு‌றி‌த்து தொழிற்சாலையின் சார்பில் பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் தனியார் தொழிற்சாலையில் இரும்புகளை கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவி, பழனி, நாசர், வாசுதேவன், மாயாண்டி ஆகிய 5பேரை கைது செய்து அவர்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய லாரி, கிரேன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!