ஆந்திராவிலிருந்து பஸ்சில் கஞ்சா கடத்திய இளம் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

ஆந்திராவிலிருந்து பஸ்சில் கஞ்சா கடத்திய இளம் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட நால்வர் கஞ்சா பொட்டலங்களுடன்.

Thiruvallur News Today - ஆந்திராவிலிருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Thiruvallur News Today -திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அம்மாநில அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது பயணிகள் சிலரது இருக்கையின் கீழ் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பாக்கிய கிருஷ்ணன், தினேஷ், முரளி மற்றும் ஜோதி என்ற இளம் பெண் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக மடித்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு பேர் மீதும் ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்