12 ஆண்டுக்கு பின் பெரியபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலை பணி

12 ஆண்டுக்கு பின் பெரியபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில்  சாலை பணி
X

பெரியபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

12 ஆண்டுக்கு பின் பெரியபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது சாலை பழுதடைந்து சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலை மாறியுள்ளது.

மேலும் மழைக்காலம் வந்துவிட்டால் மழைத் தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். இந்தப் பகுதியில் ஒரு வடிகால் கால்வாய் இல்லாததால் மழைநீர் குடியிருப்புக்குள் உள்ளே செல்லும் அவல நிலை ஏற்பட்டிருந்தது. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் இச்சாலையை தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ₹.12.74 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கோகிலா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். இதில் தி.மு.க.நிர்வாகிகள் சந்திரசேகர், எல்.சீனிவாசன், ராஜா, மூர்த்தி, சம்பத், ஹேம குமார், மணி, சங்கர், பாஸ்கர், ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!