பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக மூடிக் கிடக்கும் நூலக கட்டிடம்

பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக   மூடிக் கிடக்கும் நூலக கட்டிடம்
X

பெரிய பாளையம் ஊராட்சியில் 10ஆண்டாக மூடி கிடக்கும் நூலக கட்டிடம்.

பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக மூடிக் கிடக்கும் நூலக கட்டிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டு மாநகர் பகுதியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கிராமத்தில் நூலக கட்டிடம் இல்லாத காரணத்தினால் பெரியபாளையம் ஊராட்சி பாளையக்கார தெருவில் உள்ள நூலக கட்டிடத்திற்கு பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று நாளிதழ்கள் அறிவு சம்பந்தமான புத்தகங்களை படித்து வந்தனர். நீண்ட தூரம் செல்வதால் அப்பகுதி மக்கள் தண்டு மாநகர் தாங்கள் பகுதியில் நூலக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று 2009-10.ஆம் ஆண்டில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் ஒன்று கட்டி முடித்து 1 வருட காலம் மட்டும் செயல்படுத்தப்பட்டு பின்னர் மூடப்பட்டது 10. வருடங்கள் ஆகியும் இன்று வரை நூலகத்தை திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் நூலகத்தில் உள்ளே உள்ள புத்தகங்கள் பாழடைந்து செல்லரித்து வீணாகிறது. எனவே இந்த நூலகத்தை உடனடியாக திறந்து நூலகத்தை பராமரிக்க நிரந்தரமாக நூலகரை அமைத்து தர வேண்டும் என படித்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story