ஆவடியில் பணப் பிரச்சனை தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை

ஆவடியில் பணப் பிரச்சனை தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை
X

பைல் படம்.

தகராறில் பலத்த காயம் அடைந்த மோகன் குமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி காவேரி பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மோகன் குமார் (என்கிற) மனோஜ் (26). ஆவடி புது நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு (31). இவர்கள் ஆவடி பகுதியில் வீடுகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் பணி செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மோகன் குமார் பிரபுவிடம் 10,000 வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பலமுறை பிரபு, மோகன் குமார் இடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு மோகன்குமார் தந்துவிடுகிறேன் என்று பலமுறை சொல்லியும் பணத்தைத் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. வழக்கம்போல் மோகன் குமார் தண்ணீர் சப்ளை செய்ய வாகனத்தை எடுக்க வந்த போது, அங்கு வந்த பிரபு, மோகன் குமாரிடம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை முத்தி கைகலப்பாக மாறி உள்ளது.

இதனை அடுத்து பிரபு உடன் வந்த சதீஷ் (32) கலையரசன் (25) ஆகியோர் லாரி டயர் கழட்டும் ஜாக்கி ராட் எடுத்து மோகன் குமாரை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மோகன் குமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன் குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரபு, சதீஷ், கலையரசன் ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்