பசித்தோருக்கு உணவிடும் வள்ளலார் பசியாற்றும் மையம்

பசித்தோருக்கு உணவிடும்  வள்ளலார் பசியாற்றும் மையம்
X
கொரோனா இரண்டாம் அலை கால கட்டத்தில் பசியால் வரும் ஏழைகளுக்கு தினமும் மதிய உணவை வழங்கி வருகிறது.

ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் 4 வருடங்களுக்கு மேலாக தினம்தோறும் ஏழை எளியவர்களுக்கு பசியால் வரும் 100 அன்பர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் வள்ளலாரின் சன்மார்க்கம் அன்பர்கள் ஜீவகாருண்யம் எனும் பசிக்கு உணவு வழங்கும் சேவையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 வருடத்திற்கும் மேலாக சென்னை ஆவடி பீட்டர்ஸ் இஞ்சினியரிங் கல்லூரி அருகில் உள்ள வள்ளலார் பசியாற்றும் மையம் என்ற பெயரில் ஜீவகாருண்ய சேவையை ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி வசந்தி இருவரும் இணைந்து செய்து வருகின்றனர். தங்கள் வீட்டில் ஒரு பகுதியில் சமையல் செய்து தினம்தோறும் பசியோடு வரும் 100 அன்பர்களுக்கு பகல் 11 மணி மதியம் உணவு வழங்கி வருகின்றனர்.

சென்ற வருடம் கொரோனா தொற்று முதல் அலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்ததால் தினமும் 300 பேருக்கு உணவை பார்சல் வழங்கி வந்தனர். மீண்டும் கொரோனா அலையால் இங்கு வரும் ஏழை எளியவர்களின் பசிக்கு தங்களால் இயன்றவற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர்.

இதனை அரசின் அறிவுறுத்தல்படி உணவை பாக்கெட் செய்து அனைவரும் முககவசமிட செய்து தினமும் சமூக இடைவெளியுடன் வழங்கி வருகின்றர். இச்சேவைக்கு அவர்களது உறவுகள் மற்றும் நண்பர்கள் பெரிதும் உதவி வருவதாகவும் அவை தற்சமயம் போதாததால் மேலும் உதவி வழங்க நல்ல உள்ளம் கொண்ட அன்பர்களின் உதவியை வேண்டுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து 4வருடமாக தற்போதுள்ள இக்கட்டான பேரிடர் காலத்தில் இவர்களின் தினசரி ஏழை எளியவர்களுக்கான பசியாற்றும் சேவையை இங்கு உள்ள பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி மகிழ்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்