/* */

ஆவடி அருகே மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இரண்டு பேர் கைது

ஆவடி அருகே மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஆவடி அருகே மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இரண்டு பேர் கைது
X

ஆவடி அருகே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டிடம் தங்க நகை பறித்து தப்பி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் மாதவன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரது மகன் திருமணம் ஆகி துபாயில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஆண்டாள் வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது மூன்று மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அப்போது அங்கு மூதாட்டி ஆண்டாள் உறங்கிக் கொண்டிருந்ததால் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஆண்டாள் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நந்து ஆகியோர் தான் மூதாட்டி ஆண்டாளிடம் கத்தி முனையில் நகை பறித்து சென்றவர்கள் என தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருநின்றவூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனையும், நந்துவையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Updated On: 8 Jan 2023 4:47 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்