திருநின்றவூர்; தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

திருநின்றவூர்; தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
X

ஆவடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்

திருநின்றவூர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஆவடியை அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் கமல் (27) அரண்வாயல் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்..

கடந்த மே 30ம் தேதி கமலுடன் பணிபுரியும் வட நாட்டு தொழிலாளி ஒருவர் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

முருகச்சேரி அருகே சென்றபோது குத்தம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த லோகேஷ் (எ)அப்பு (28), கூடப்பாக்கம் கலெக்டர் நகரைச் சேர்ந்த முருகன் (எ)சந்தோஷ் (28) ஆகிய அவர்களை வழிமறித்து கத்தி முனையில் பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றனர்.

புகாரின்படி மணவாள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷ், முருகன் ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே வெள்ளவேடு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பல வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்ந்து அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் லோகேஷ், முருகன், ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai automation in agriculture