ஊரடங்கிலும் ஆவடியில் போக்குவரத்து நெரிசல்; திணறிய போலீசார்

ஊரடங்கிலும் ஆவடியில் போக்குவரத்து நெரிசல்; திணறிய போலீசார்
X

கொரோனா ஊரடங்கு முடிந்தது போல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆவடி

பொது ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் ஆவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் திண்டாடினர்.

ஆவடி மாநகராட்சியில் காலை முதல் மதியம் வரை சாலைகள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிக அளவிலான வாகனங்களால் கூட்ட நெரிசலில் ஆவடி மாநகர முக்கிய சாலைகள் திணறியது. குறிப்பாக ஆவடி காமராஜர் நகர், புதிய ராணுவ சாலை, நேரு பஜார், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் வழக்கம்போல் இயல்பு நிலையை திரும்பிவிட்டது போல் கூட்டம் கலைகட்டியது.

இதன் காரணமாக ஆவடியில் செயல்பட்டு வந்த மாநகராட்சி காய்கறிகள் சந்தை மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தற்காலிக சந்தையை அமைச்சர், ஆட்சியர் துவக்கிவைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி நேரு பஜார் காய்கறி சந்தையை தற்காலிகமாக மூடிய நிலையில், ஆவடி அருகே காமராஜர் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக காய்கறி சந்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமலுக்கு வந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ஆவடி மாநகராட்சி காய்கறி சந்தையை மாநகராட்சி ஆணையர் நாராயணன் மூடினார்.

இதையடுத்து தற்காலிக சந்தையை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்த்திடவும் அரசு கூறும் நெறி முறைகளை பின்பற்றவும் பொதுமக்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் பஜார் வீதிகளில் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ் மற்றும் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள கடைகளில் அபராதம் விதித்தும் கடைகளை மூடச்சொல்லி அறிவுறுத்தினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது