திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவரின் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு!
வீடுவீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி கொரோனா ஊசிபோட வலியுறுத்திய ஊராட்சி மன்ற தலைவர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே மோரை ஊராட்சியில் ௫ ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. தற்போது ஊரடங்கால் வருவாய் இன்றி தவித்து வரும் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, உப்பு, சமையல் எண்ணெய், பருப்பு, மிளகாய் தூள், உள்ளிட்ட13 வகையான மளிகை பொருட்கள் என 28 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனை ஊராட்சியில் உள்ள 12 குக்கிராமங்களுக்கும் வீடு, வீடாக சென்று ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் வழங்கி, பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேவையின்றி யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், ஏதேனும் தேவை இருப்பின் ஊராட்சிமன்ற நிர்வாகத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu