ஆவடி காமராஜர் நகர் அரசு பள்ளிக்கு மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்

ஆவடி காமராஜர் நகர் அரசு பள்ளிக்கு மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்
X

ஆவடி காமராஜர் நகர் பள்ளிக்கு இன்று மாணவிகள் ஆர்வத்துடன்  வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் அரசு பள்ளிக்கு மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்.

தமிழகத்தில் இன்று அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசு அறிவித்திருந்த சூழ்நிலையில் ஆவடி காமராஜர் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஒன்றரை வருடங்களுக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.

சுமார் 2ஆயிரத்துக்கும் மேல் இங்கு மாணவர்கள் பயில்வதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாடங்கள் நடத்தப்படுகிறது.

பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினிகள் கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் பள்ளிக்கூடத்திற்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கும் வெப்ப பரிசோதனை பரிசோதிக்கப்பட்டு கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்த பின்னரே, முகக் கவசங்கள் அணிந்து உள்ளே வர அறிவுறுத்தப்பட்டனர்.

ஒன்றரை வருடங்களுக்கு பின் பள்ளிக்கூடம் இன்று திறந்ததால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் ஆவடி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை தந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!