ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு போட்டிகள்

ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு போட்டிகள்
X

ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகம்

ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

ஆவடி சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

சென்னை ஆவடி சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் மத்திய அரசின் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் ஸ்ரீ கோபால் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் விளையாட்டு வீராங்கனை கலந்து கொண்டார்.

2 மாதம் தொடர்ந்து நடைபெறும் இந்த போட்டியில் உடல் வலிமையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு படைப் பயிற்சியின் கமாண்டர் தாமஸ் வின்சன், துணை கமாண்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!