ஆவடியில் திடக் கழிவு துப்புரவு பணிகள்: அமைச்சர் நாசர் துவக்கி வைப்பு

ஆவடியில் திடக் கழிவு துப்புரவு பணிகள்: அமைச்சர் நாசர் துவக்கி வைப்பு
X

ஆவடியில் திடக் கழிவுகளை அகற்றுதல், கொசுக்கள் உற்பத்தியாகுதலை தடுத்தல்,உள்ளிட்ட பல்வேறு கூட்டு துப்புரவு பணியினை பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆவடியில் திடக் கழிவுகளை அகற்றுதல், கொசுக்கள் உற்பத்தியாகுதலை தடுத்தல் உள்ளிட்ட துப்புரவு பணியினை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் திடக் கழிவுகளை அகற்றுதல், கொசுக்கள் உற்பத்தியாகுதலை தடுத்தல்,உள்ளிட்ட பல்வேறு கூட்டு துப்புரவு பணியினை பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு அங்கமாக இன்று ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 39,44, 45, ஆகிய வார்டுகளில் ஒட்டு மொத்த கூட்டு துப்புரவு பணியினை பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக் கழிவுகளை அகற்றுதல் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் கொசுப்புழு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். முதற்கட்டமாக இந்த 3 வார்டுகளில் ஒட்டு மொத்த கூட்டு துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணி துவக்கப்பட்டு உள்ளது குறிப்பிட்டது.

இதனைத் தொடர்ந்து ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று தமிழகத்திலேயே தூய்மை மாநகராட்சி ஆவடி மாநகராட்சி என பெயர் பெற வேண்டும் என்பது எங்களது லட்சியம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டிகளை சீர் செய்து தண்ணீரை சுத்தம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!