திருவள்ளூர் அருகே மயங்கி விழுந்து துப்பரவு தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே மயங்கி விழுந்து துப்பரவு தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
X
திருவள்ளூர் அருகே மயங்கி விழுந்து துப்பரவு தூய்மைப் பணியாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், ஏகாட்டூர், அன்னை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன், 62. இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தூய்மை பணியாளராக பணியாற்றினார்.

நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்து , பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே துப்புரவு பணி செய்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், அவரை ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story