கோயில் நிலம் மோசடி: கருப்பு துணியால் கண்களை கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோயில் நிலம் மோசடி: கருப்பு துணியால் கண்களை கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
X

கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

போலி ஆவண பத்திரத்தை உருவாக்கி கோயில் நிலத்தை மோசடி செய்த 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சின்னம்மன் கோவில் பகுதியில் ஹரே கிருஷ்ணா கோவில் உள்ளது. இந்த கோவில் பலஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு ஹரே கிருஷ்ணா என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். இதனையடுத்து கோவில் நிர்வாகத்தில் இருந்த ஜெயபால், வெங்கடேசன், வெங்கடராமன், சுப்பிரமணியன், விக்னேஷ், ஏகாம்பரம், சுப்பிரமணி, கோடீஸ்வரன். உள்ளிட்ட 8.பேர் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் செய்து கணக்கு வழக்குகளை சரிவர காண்பிக்காததால் நிர்வாகத்தில் பொறுப்பிலிருந்து எட்டு பேரும் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2020 முதல் கோவில் நிர்வாகம் நடத்தப்பட்டு வந்த நிலையில். அறக்கட்டளையின் நிரந்தர டிரஷ்டி மேனேஜரான சரவணன் என்பவர் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் முன்னால் நிர்வாகிகள் 8 பேரும் சேர்ந்து ஹரே கிருஷ்ணா சேவா அறக்கட்டளையின் சொத்துக்களின் மீது போலியாக பத்திரம் தயார் செய்து ஹரே கிருஷ்ணா பக்த ஜனா டிரஸ்ஸிக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இதை அறிந்த சரவணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்த நிலையில். ஆவடி காவல் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட எட்டு பேரும் தலைமறைவாக உள்ளதாக ஒரு தலைப்பட்சமாக எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலை கழிப்பதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் நுழைவாயிலில் அமர்ந்து கண்களில் கருப்பு துனி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட 8 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவரும் பட்சத்தில் அடுத்த கட்டப் போராட்டங்களை முன்னெடுக்க போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது