ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
X

பைல் படம்.

ஆவடி அடுத்த மோரை வினோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆவடி அடுத்த முறை மாநகரில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று இரவு ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியதில் 1டன் குட்கா பொருட்கள் சிக்கியது.

இது தொடர்பாக திருப்பதி (29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 1டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு