ஆவடி அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி

ஆவடி அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி
X

கைது செய்யப்பட்ட அன்பு என்ற ஜெயராஜ்.

ஆவடி அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் கலைஞர் நகர் திருவிக தெருவை சேர்ந்தவர் அன்பு என்ற ஜெயராஜ் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.

அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ரகசிய தகவலின் படி திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் வீரராகவன் தலைமையில் கலைஞர் நகரில் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது சந்தேகப்படும்படி நபர் ஒரு வீட்டின் உள்ளே சென்றார். அப்பொழுது காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்த பொழுது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்னேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது