மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!

மின்தடையை  கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!
X

முற்றுகை கோப்பு படம் 

ஆவடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆவடி வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மின்தடை அதிக அளவில் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் அதிக நேரம் மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். நேற்று இரவும் மின் தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இரவு நேரத்தில் திடீரென ஆவடி மின்வாரிய அலுவலகத்தின் உள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஆவடி வீட்டு வசதி குடியிருப்பில் சுமார் 8.ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வரும் நிலையில். இந்த குடியிருப்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பெரும் அவதிப்படுவதாகவும், மின்வாரிய அதிகாரிகள் இரவு நேரத்தில் சரியான முறையில் பணியில் ஈடுபடாமல் இருப்பதாகவும், பொதுமக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல் துறையினர் பொதுமக்களுடன் சமரசம் செய்து விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story