வாய் பேச முடியாத மகனை கொன்றுவிட்டு பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை

வாய் பேச முடியாத மகனை கொன்றுவிட்டு பெற்றோர்கள்  தூக்கிட்டு தற்கொலை
X
ஆவடி அருகே மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மகனின் உடல்நல குறைபாட்டை சரி செய்ய முடியாத காரணத்தினால் விரக்தியில் மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகேயுள்ள கோவில்பதாகை பகுதியை சேர்ந்த முகமது சலீம், சோபியா இவர்களுக்கு மகன் உள்ளார் பிறவியில் இருந்து வாய் பேச முடியாமலும் காது கேட்காமலும் இருந்து வந்தார். இதனை குணப்படுத்த முடியவில்லை எனக் கூறி தாய் தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், முகமது சலீம் அவரது மகனை பாலித்தீன் கவர் மூலம் முகத்தை மூடி மூச்சுத் திணற வைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மகனின் உடல்நல குறைபாட்டை சரி செய்ய முடியாத மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!