தடுப்பூசி போட மறுத்த நரிக்குறவர்கள் -விழிப்புணர்வு ஏற்படுத்தி போட வைத்த மாநகர நல அலுவலர்
.நாடு முழுவதும் கொரோனா அலையின் வேகத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் பொது மக்களை அறிவுறுத்தி வருகிறது. பெரும்பாலானோர் தடுப்பூசி போடுவதற்கு முன் வந்தாலும் ஒரு பிரிவினர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று தவறான கண்ணோட்டத்தில் தடுப்பூசி போடாமலேயே இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் திருமுல்லைவாயில் ஜெயா நகரிலுள்ள நரிக்குறவர் காலனி பகுதிக்கு ஆவடி மாநகர நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்தனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்று கூறி யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை. இதனை தொடர்ந்து அவர்களிடம் பேசிய மாநகர நல அதிகாரி அவர்களுக்கு கொரோனாவின் வீரியம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி கூறினார்.
மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை குறைக்க முடியும் என்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை அவரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல ஒருவராக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu