'ஸ்வீட் எடு! கொண்டாடு!' மகளிருக்கான இலவச பயணத்தை துவக்கி வைத்த அமைச்சர்

ஸ்வீட் எடு! கொண்டாடு! மகளிருக்கான இலவச பயணத்தை துவக்கி வைத்த அமைச்சர்
X
ஆவடியில் மகளிருக்கான இலவச பயணத்தை அமைச்சர் சா.மூ. நாசர் இனிப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மகளிருக்கான இலவச பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ஆவடியில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் துவக்கி வைத்தார். மேலும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சா.மு.நாசர்:-

தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட பால் விலை குறைப்பு, மகளிருக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகளை முதலமைச்சர் பதவி ஏற்று கையெழுத்திட்டார். தற்போது அந்த திட்டங்களை மக்களிடையே துவக்கி வைப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!