வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் நாசர் ஆய்வு
ஆவடியில் வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் திருவள்ளுர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் தற்போதுவரை பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த வாரம் பெய்த கன மழையின் போது நீர் தேங்கிய வசந்தம் நகர் பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் நாசர் ஓம் சக்தி நகர் கோனோபஸ் பகுதியில் உள்ள கால்வாயை அகலப்படுத்தி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
இதேபோன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு , கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் தேங்கிய மழைநீரினை அகற்ற ஆய்வு மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் இந்த பகுதியில் புதிய மழை நீர் வடிகால்வாய்களை அமைக்க உத்தரவிட்டார். இதன் பின்னர் ஆவடியில் பிரதானமான பருதிப்பட்டு ஏரி, அரபாத் ஏரி, அயப்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பியதையடுத்து மூன்று எரிகளையும் அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். அப்பொழுது அங்கு மீன் பிடிப்பதற்காக வலை வைக்கப்பட்டிருந்தது. அதில் சிக்கிய மீன்களை அமைச்சர் நாசர் எடுத்து மீண்டும் நீரில் விட்டார். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5 செ.மீ மழை பதிவகியுள்ளது. இதனால் மத்திய பாதுகாப்பு துறைகளில் இருந்து வெளியேற கூடிய மழைநீர் வடிகால்வாய் வழியாக செல்லும் அளவிற்கு பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழைநீர் முதல்வரின் நேரடி ஆய்விற்கு பின் மூன்று மணி நேரத்திற்குள் வடிந்தது. இந்த ஆண்டு பெய்த கனமழையால் ஓரிரு இடங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
முதல்வரின் உத்தரவிற்கேற்ப 100கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் 90சதவீதம் முடிவடைந்துள்ளது. 10சதவீத பணிகள் முடிவடைந்ததும் எதிர் வரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் செல்லக்கூடிய அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இனிவரும் மழைக்காலத்தில் மழைநீர் தேங்காத மாநகராட்சியாக மாற்றக்கூடிய அளவிற்கு தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் மழைநீர் வெளியேற்ற முன்மாதிரியான செயல்ப்படுத்தியது போல் ஹைடெக்னாலஜி திட்டங்களை படிபடியாக அனைத்து மாநகராட்சிகளுக்கும் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.அப்போது அவருடன் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயக்குமார், மாநகரச் செயலாளர் ஆசிம் ராஜா, ஆவடி ஆணையர் க.தர்ப்பகராஜ், ஆகியோர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu