விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
X

விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் நாசர்

ஆவடி காமராஜர் சாலையில் நடந்த விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் நாசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

ஆவடி காமராஜர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் அந்த நபருக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துவிட்டு காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கீழே இறங்கி உடனடியாக காயமடைந்த நபரை மீட்டு அருகில் இருந்த ஆட்டோவில் ஏற்றி ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் மருத்துவமனை சென்று காயமடைந்தவரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் நாசரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்