சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட அமைச்சர்

சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட அமைச்சர்
X

குப்பைகளை தன் கையில் வாங்கிய அமைச்சர் சா.மு.நாசர் 

ஆவடி மாநகராட்சியில் சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட அமைச்சர் சா.மு.நாசர்

ஆவடி மாநகராட்சியில் சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பொதுமக்கள் கொண்டு வந்த குப்பைகளை தன் கைகளால் வாங்கி குப்பைத் தொட்டியில் போட வைத்தார்; இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல்.

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி மாநகராட்சியில் இன்று காலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலை வழியாக சென்றபோது அங்கு குப்பைத்தொட்டியின் அருகே குப்பைகள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். உடனே காரை நிறுத்தி அருகே இருந்த தூய்மைப் பணியாளர்கள் வரவழைத்து குப்பைகளை அகற்ற கூறினார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாலையில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்ததோடு உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அப்போது குப்பை போட வந்த நபர் ஒருவர் சாலையிலேயே குப்பையை போடவிருந்தார். அவரிடமிருந்து குப்பைகளை தன் கையில் வாங்கிய அமைச்சர் சா.மு.நாசர் அதனை குப்பைத் தொட்டியில் போட வைத்தார். கொரோனா அச்சத்ததால் யார் பொருளையும் தொடாத நிலையில் வீட்டுக் குப்பைகளை தன் கையால் அமைச்சர் வாங்கியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!