ஆவடியில் ரூ 318 கோடி மதிப்பிலான நில பட்டாக்களை வழங்கிய அமைச்சர்

ஆவடியில் ரூ 318 கோடி மதிப்பிலான நில பட்டாக்களை வழங்கிய அமைச்சர்
X
ஆவடியில் நடந்த நிகழ்ச்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் நில பட்டாக்களை வழங்கினார்.
ஆவடியில் பட்டா வேண்டி பெறப்பட்ட மனுக்களுக்கு ரூ 318 கோடி மதிப்பிலான நில பட்டாக்களை அமைச்சர் நாசர் வழங்கினார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் மனுக்கள் பெறப்பட்டன.

அந்த வகையில் ஆவடி சுற்றுவட்டார பகுதியில் பட்டா வேண்டி பலர் மனு அளித்து இருந்தனர். இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பருத்திப்பட்டு பகுதியில் 350 பயனாளிகளுக்கு 318 கோடி மதிப்பிலான நிலங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

தற்போது திமுக ஆட்சி வந்ததும் 318 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது, மேலும் 35,162 பேருக்கு பட்டா வழங்கப்படவுள்ளது . மேலும் ஆவின் பணி நியமனத்தில் எந்தவொரு ஒளிவு, மறைவும் இல்லாமல் தேர்வு வெளிப்படையாக நடைபெறும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!